நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்த விஜய் – காரணம் இந்த கிசுகிசுதான்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:26 IST)
1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் சரத்குமாரின் தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் விஜய் வேண்டாம் என சொல்லி மறுத்துள்ளார்.

நடிகர் சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்தது நாட்டாமை திரைப்படம். அதன் பிறகே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் அவரும் இடம்பிடித்தார். அந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பியாகவும், ராஜா ரவீந்தர் கடைசி தம்பியாகவும் நடித்திருந்தனர்.

ஆனால் ராஜா ரவீந்தர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய்யிடம் பேசினார்களாம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும், தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியும். ஆனால் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் விஜய். ஏனென்றால் அந்த கதாபத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தவர் நடிகை சங்கவி. ஏற்கனவே சங்கவியோடு வரிசையாக பல படங்களில் நடித்திருந்ததால் இருவருக்கும் இடையே காதல் என அந்த காலத்தில் கிசுகிசுக்கள் பரவியதால் விஜய் அந்த முடிவை எடுத்தார் என சொல்லப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்