விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’… அடுத்த பட அறிவிப்பு!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (13:26 IST)
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து கொலை என்ற படம் உருவாக உள்ளது.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சற்றுமுன் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு 'தமிழரசன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டு மொத்த படமும் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்க உள்ளார். கொலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இன்பினீட்டி ப்லிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்