தளபதி 63 படத்தை மூட்டை கட்டிய விஜய்? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:32 IST)
தெறி, மெர்சல் போன்ற மெகா ஹிட் வெற்றி படங்களை தொடர்ந்து விஜய்-அட்லீ  3-வது முறையாக தளபதி 63 படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். 


 
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற தீபாவளியை குறிவைத்து உருவாகிவருகிறது. 
 
தளபதி 63 படத்திற்காக சென்னையில் உள்ள வின்னி மில்லில் தற்போது செட் அமைக்கபட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்த  வண்ணம் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது. 


 
விஜய் ரசிகர்கள் தினமும் படையெடுப்பதால் படபிடிப்பு சற்று தாமதமாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்யின் கெட் அப் தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய்யின் கெட்டப் எளிதாக லீக் ஆகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர் படக்குழுவினர் . 
 
தற்போது இதனை கருத்தில் கொண்டு வின்னி மில்லில் இருந்து தெலுங்கானாவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு ஷிப்ட் ஆகலாமா என படக்குழு தீவிரமாக யோசித்து வருகின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.  இதனை கேள்விப்பட்ட சென்னையில் உள்ள ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்