காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்ததால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது..சென்னைப் போன்ற பெருநகரங்களில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த போதே சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டாலும் இந்த படம் தொடர்ந்து வெற்றிகரமாக தியேட்டர்களிலும் ஓடியது..
அதனால் இந்த படத்தை ரீமேக் செய்வதில் பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மிகப்பெரிய டிமாண்ட் உருவானது. இதன் தெலுங்குப் பதிப்பை தமிழில் இயக்கிய பிரேம் குமாரே இயக்க இருக்கிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் அங்கு ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்க இருக்கின்றனர். தமிழில் அனைவரும் ரசிக்கதக்க வகையில் அமைந்த பள்ளிக்கூட பிளாஷ்பேக் காட்சிகளை நீக்கிவிட்டு கல்லூரிக் காதலாக மாற்ற திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. இதனால் பிளாஷ்பேக் காட்சிகள் 96-ல் நடக்காமல் 2009-ல் நடப்பது போல அமைக்கப்பட்டு வருகின்றனாம்.