பிரேக் எதுவும் வேண்டாம்: அட்லிக்கு விஜய் போட்ட கட்டளை?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (23:37 IST)
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களோ ஒருகட்ட படப்பிடிப்பிற்கும், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் அதற்கு மாறாக 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



 




'பைரவா' ரிலீசுக்கு முன்பே முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தடுத்து ராஜஸ்தான், சென்னை, ஐரோப்பிய நாடுகளில் இடைவெளி இன்றி படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் நேற்று முதல் தொடங்கிவிட்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி கேட்டுக்கொண்டதன்படி  இடைவெளியின்றி படத்தை முடிக்க அட்லிக்கு விஜய் உத்தரவிட்டதாகவும், அதன்படி இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று தொடங்கிய படப்பிடிப்பில் விஜய், சமந்தா, சத்யன் , யோகிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்