கமல்-அமலாபால் போட்டோ: ஏன் இந்த கொச்சையான புத்தி? ரசிகர்கள் புலம்பல்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (22:26 IST)
உலக நாயகன் கமல்ஹாசனும், நடிகை அமலாபாலும் சமீபத்தில் ஜிம் ஒன்றில் சந்தித்துள்ளனர். அப்போது கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை எடுத்த அமலாபால், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.





இந்த புகைப்படத்தை இண்டர்நெட் பயனாளிகள் பெரும்பாலும் மிகவும் கொச்சையாக வர்ணித்து கமெண்ட் பகுதியில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். கமல் தற்போது கவுதமியை பிரிந்து தனியாக இருப்பதாகவும், அமலாபாலும் தற்போது கணவர் விஜய்யை பிரிந்து இருப்பதாகவும், இருவரும் இணைந்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் பலர் கூறியுள்ளனர். மேலும் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் அமலாபால் தான் ஜோடி என்றும், அடுத்த படத்திற்கு மட்டுமின்றி அடுத்தடுத்த காலத்திற்கும் கமலுக்கு அவர் தான் ஜோடி என்றும் கொச்சையாக பதிவு செய்து வருகின்றனர்.

ஒருசிலர் மட்டுமே 'ரசிகர்களுக்கு ஏன் இப்படி புத்தி போகிறது. ஒரு நடிகை ஒரு நடிகருடன் இணைந்து போட்டோ எடுத்தாலே உடனே சம்பந்தப்படுத்தி அசிங்கமாக பேசுவதா? என்று கண்டித்துள்ளனர். சில காலமாக தனுஷை வறுத்தெடுத்த இண்டர்நெட் போராளிகள் தற்போது கமல் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிகிறது.

 
அடுத்த கட்டுரையில்