கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காதலர்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து அவ்வப்போது காதல் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் காதலர் தினமான இன்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மஞ்சள் நிற பட்டு சேலையில் அழகாக நயன்தாராவும் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் விக்னேஷ் சிவனும் உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
மேலும் தங்கமே உன்னை நான் காதலிக்கின்றேன் என்றும் எனது காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் என்றும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது