விக்னேஷ் சிவன் - நயன்தாரா முதல் திருமண நாள்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (09:35 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்று சரியாக ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். 
 
இந்த ஒரு வருடத்தில் தனக்கு நம்பிக்கை மற்றும் அன்பு பாசம் ஆகியவற்றை கொடுத்து ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனாக மாற்றியதற்கு நன்றி என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு தெரிவித்துள்ளார். 
 
என் உயிரோடு ஆதாரமே நீங்கள்தான் என்றும் இந்த ஒரு வருடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதிர்பாராத பின்னாடிவுகள் இருந்தாலும் இலக்குகளை கனவுகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலும் உன்னால் தான் நான் பெற்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
உயிர் மற்றும் உலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமாக இருப்பதற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்