இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்ட கிட்ஸ் vs கொரோனா பாடல்!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:38 IST)
இயக்குனர் அஜயன் பாலா இயக்கியுள்ள் கிட்ஸ் vs கொரோனா பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் குழந்தைகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி இயக்குனரும் எழுத்தாளருமான் அஜயன் பாலா ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை எழுத்தாளர் ரமேஷ் வைத்யா எழுத அதில் பல குழந்தைகளுடன் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா நடித்துள்ளார். இந்த பாடலுக்கு கிட்ஸ் vs கொரோனா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாஜ்நூர் இசையமைத்துள்ள இந்த பாடலின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இன்று அந்த பாடலை இயக்குனர் வெற்றிமாறன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்