புதிய அவதாரம் எடுத்த வெங்கட் பிரபு...

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (18:25 IST)
இயக்குநர் வெங்கட் பிரபு, புதிய படமொன்றில் போலீஸாக நடித்துள்ளார்.


 

 
கலையரசன், கருணாகரன் நடித்துவரும் படம் ‘களவு’. முரளி கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தில், ‘மிஸ் தமிழ்நாடு 2017’ அபிராமி ஐய்யர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக வெங்கட் பிரபு நடித்துள்ளார். அவரைப் பார்த்தால் ‘கலகல’ காமெடிதான் நினைவுக்கு வரும். அவர் எப்படி போலீஸாக? என்று இயக்குநரிடம் கேட்டோம்.
 
“போலீஸ் படங்கள் என்றாலே பயமுறுத்துபவையாகவும், சீரியஸாகவும்தான் இருக்கும். ஆனால், எல்லா போலீஸுமே நிஜத்தில் அப்படி கிடையாது. ஓரிருவர்தான் அப்படி இருப்பார்கள். எனவே, உண்மையான போலீஸ் எப்படி இருப்பான் என்பதைக் காட்டத்தான் வெங்கட் பிரபுவைத் தேர்ந்தெடுத்தேன். அதற்காக, அவர் வரும் காட்சிகள் காமெடியாக இருக்காது. அதேசமயம், இறுக்கமாகவும் இருக்காது” என்கிறார் முரளி கார்த்திக்.
அடுத்த கட்டுரையில்