நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்க சம்மதிக்க காரணம் இதுதானா?

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (17:54 IST)
நயன்தாரா நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து, இந்தப் படத்தில் வில்லனாக  நடிக்கவைக்க கெளதம் மேனனைத்தான் முடிவு செய்தாராம். ஹீரோ அதர்வாவும், ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

 
இப்படத்தில் விஜய் சேதுபதி 15 நிமிட காட்சிகளில்  நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு.
 
பெங்களூரையே தொடர் கொலையால் அதிரவைக்கும் ருத்ரா என்ற கொலைகாரனை வேட்டையாடுகிறார், சி.பி.ஐ அதிகாரி நயன்தாரா. சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவரான அதர்வா ஜாலியாகப் படித்துக்கொண்டும், காதலித்துக்கொண்டும்  இருக்கிறார். இரண்டையும் இணைந்து கலக்கும் கிரைம் கதை இது. நயன் கதையில் மயங்கிதான் நடிக்க சம்மதித்தார்.  நயன்தாராவால் வேட்டையாடப்படும் ருத்ரா கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர்  கைவசம் 2 படங்கள் இருந்ததால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை.
அடுத்த கட்டுரையில்