பாலிவுட்டுக்கு செல்கிறாரா இயக்குனர் வெங்கட் பிரபு?

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (10:28 IST)
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. சென்னை 28 திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர் அஜித், சூர்யா, சிம்பு, கார்த்தி மற்றும் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி ஹிட்ஸ்களைக் கொடுத்துள்ளார்.

சென்னை 28, சரோஜா போன்ற மீடியம் பட்ஜெட் படங்களை இயக்கிக் கொண்டிருந்த அவரை முன்னணி இயக்குனர் ஆக்கியது அஜித் நடிப்பில் அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம்தான். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்துதான் பல முன்னணி நடிகர்களின் பார்வை அவர் மேல் விழுந்தது.

சமீபத்தில் அவர் விஜய்யை வைத்து இயக்கிய ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ 2024 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. இதையடுத்து அவரின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்