குறும்படம் இயக்கும் வெங்கட் பிரபு

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (15:22 IST)
இயக்குநர் வெங்கட் பிரபு, குறும்படம் ஒன்றை விரைவில் இயக்கப் போகிறார்.

 

இயக்குநர், நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாராக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக குறும்படங்கள்தான் நுழைவுச்சீட்டாக இருக்கின்றன. தற்போது ஃபீல்டில் இருக்கும் பல இளைஞர்கள், அப்படித்தான் சினிமாவுக்குள் வந்தார்கள். ஆனால், பெரிய படங்களை இயக்கிய இயக்குநர், குறும்படம் எடுக்கப் போகிறார் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கிறது.

இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரி படமெடுக்கும் வெங்கட் பிரபு தான் அது. சமூகக் கருத்து கொண்ட இந்தப் படம், 15 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்குமாம். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஸ்ரேயான் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். வெங்கட் பிரபுவின் ‘கோவா’, ‘சரோஜா’ படங்களில் நடித்த சம்பத், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
அடுத்த கட்டுரையில்