சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உரிமை விற்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம் இது. மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து விநியோக உரிமையை, சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது.