போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய காஜல்? கோலிவுட் மற்றும் டோலிவுட் அதிர்ச்சி!!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (17:33 IST)
விவேகம் மற்றும் மெர்சல் படத்தில் தல தளபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இந்நிலையில் காஜல் மேனஜருக்கு போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.


 
 
போதை பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக, நடிகை சார்மி, நடிகர் தருண், நவ்தீப் என தெலுங்கு பிரபலங்கள் பலரின் பெயர் சிக்கியுள்ளது. 
 
தற்போது நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் புட்கார் ரோன்சன் ஜோசப் மீது புகார் பாய்ந்தது. அவரை போலிசார் கைது செய்து உள்ளனர்.
 
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கும் இதில் தொடர்ப்பு இருக்குமோ என சந்தேகித்த நிலையில், காஜல் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில் அவர் கூறியதாவது, இதற்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இனி படம் தொடர்பான விசயங்களை என்னுடைய பெற்றோர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்