பிரபல எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய ’குற்றப்பரம்பரை’ என்ற கதையை இயக்குனர் பாரதிராஜா விரைவில் தொலைக்காட்சி தொடராக இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி கிடாரி, கொம்பன் உள்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் இணைந்துள்ளார்
’தலைவர் 168’ திரைப்படத்தில் முதல்முறையாக வேல ராமமூர்த்தி இணைந்ததை அவரது பேரன் சிலம்பரசன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினி மற்றும் வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இருவரும் ஒருவரை ஒருவர் கும்பிட்டவாறு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
தலைவர் 168 படத்தில் ஏற்கனவே குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது வேல ராமமூர்த்தி இந்த படத்தில் இணைந்து உள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது