இந்திக்கு செல்லும் வேதிகா!

வியாழன், 24 மே 2018 (14:28 IST)
இந்தியில் பிரபல நடிகர்கள் இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வேதிகா.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் வேதிகா. தற்போது அவர் கைவசம் ‘காஞ்சனா 3’, ‘ஹோம் மினிஸ்டர்’ என 2 படங்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக, தமிழில் ஒரு படத்தைத் தவிர அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை.
 
அவ்வபோது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசிய விட்டு வந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
 
இந்நிலையில், இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தில் நடிக்க வேதிகா ஓப்பந்தமாகியுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கும் இப் படம் ஆங்கில படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்