தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் தீவிர ரசிகையும் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் அவருடன் நடித்தவருமான நடிகை வரலட்சுமி பிகில் படத்தை இதுவரை பலமுறை பார்த்து விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
இந்த நிலையில் வரலட்சுமி நடத்தி வரும் ’சேவ் சக்தி’ என்ற அமைப்பில் இருக்கும் குழந்தைகளுக்காக ஒரு சிறப்புக் காட்சியை அவர் ஏற்பாடு செய்துள்ளார். சென்னை கோயம்பேடு அருகில் உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் ஒரு முழு காட்சியை அவர் சேவ்சக்தி குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்துள்ளார். மேலும் குழந்தைகளோடு குழந்தைகளாக வரலட்சுமியும் உட்கார்ந்து ‘பிகில்’படத்தை சந்தோசமாக பார்த்து மகிழ்ந்தார்
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த வரலட்சுமியை திரையரங்கு நிர்வாகிகள் ஆச்சரியமாக பார்த்தனர். மேலும் படம் பார்த்த சேவ்சக்தி அமைப்பின் குழந்தைகள் ’படம் தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இந்த படம் தங்களுக்கு மன தைரியத்தையும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். இதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றியாக பார்க்கப்படுகிறது
சேக் சக்தி அமைப்பில் உள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது இதுபோன்ற மகிழ்ச்சியை தந்து கொண்டிருப்பது தனக்கு மனதுக்கு திருப்தியாக இருப்பதாக வரலட்சுமி கூறியுள்ளார்.