குக் வித் கோமாளி சீசன் 5 ல் என்னை எதிர்பாக்கலாம்… பிரபல நடிகை கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 26 மார்ச் 2024 (07:10 IST)
விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில் வெங்கடேஷ் பட் விலக, அவருக்குப் பதில் நடிகரும், சமையற் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக இணைந்துள்ளார்.

குவைத் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களாக டப்பிங் கலைஞர் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு விஜய், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா, மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ஆகியோர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இதில் ஒரு போட்டியாளராக பிரபல நடிகை வனிதா விஜயகுமாரும் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொள்ள உள்ளாரா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளித்த வனிதா ‘ஜோவிகா பிஸி… டேட்ஸ் இல்ல. ஆனால் நான் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்