அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கும் செய்தி!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வலிமை தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டாம் என அஜித்தே சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாகவோ அல்லது தீபாவளி முடிந்த பின்னரோ ரிலீஸ் செய்யலாம் என கூறியுள்ளாராம். அதனால் தீபாவளிக்கு பின்னர்தான் வலிமை ரிலிஸாக வாய்ப்புள்ளதாக சொல்லபடுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு  மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்