அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறிய வலிமை பட வில்லன்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:53 IST)
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.  வினோத் இயக்கத்தில்  நேற்று வெளியான படம் வலிமை. இப்படத்திற்கு  மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதால், படக்குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்திய தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு   சிறந்த அறிமுகமாக இப்படம் அமைந்துள்ளது.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  நடிகர் அஜித்குமார், ஹெச்.வினோத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில்,வலிமை படத்தில் என்னால் இந்த அளவுக்கு சிறப்பாகச் செய்யும முடியும் என நம்பிக்கை வைத்து என்னை அழுத்தியவர் இயக்கு நர்  வினோத் சார்தான்.

அஜித் சார் போன்ற மனித  நேயமுள்ளவர்களைக் காணவைத்த கடவுளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். மேலும், மிகப்பெரிய வரவேற்பளித்துள்ள அஜித் சார் ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்