களத்தில் தலைவன்; கவிதையில் குழந்தை. வாஜ்பாய் குறித்து வைரமுத்து!

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:18 IST)
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 
மேலும் நாடு முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் வாஜ்பாய் புகைப்படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும், வாஜ்பாய் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாஜ்பாய் அவர்களும் ஒரு கவிஞர் என்ற அளவில் அவர் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர்களில் ஒருவர் கவியரசு வைரத்து. வாஜ்பாயின் நினைவு நாளில் வைரமுத்து தனது டுவிட்டரில் இரண்டே வரிகளில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:
 
களத்தில் தலைவன்;
கவிதையில் குழந்தை.
 
வாஜ்பாய்
நினைவுகள் வாழ்க.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்