தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் திமுகவுக்கு ஆதரவாக அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதனால் அவர் பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதையடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் வடிவேலு கலந்து கொண்டு பேசும்போது, "வரும் 2026 ஆம் ஆண்டு இதே தான். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். 200 சீட்டுக்கு மேல் ஜெயிப்பார். அவர் நம்ம முதலமைச்சர். அவர் சொன்னதையும் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். சொன்னதில் இன்னும் பத்து சதவீதம் தான் இருக்கு, சொல்லாதது எக்கச்சக்கமாக இருக்கிறது," என்று அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் இப்போது அவர் இந்தி திணிப்புக்கு எதிராகவும் பேசியுள்ளர். அதில் “ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மொழி எங்கள் தமிழ். 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளை எழுதி வைத்துள்ளார். அப்படிப்பட்ட வலிமையான தமிழ் இருக்கும்போது வேறு மொழியைத் திணிக்கவும் வேண்டாம். புகுத்தவும் வேண்டாம்” எனப் பேசியுள்ளார்.