'வாழை' திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் 'பாதவத்தி' வெளியானது.....

J.Durai
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (08:06 IST)
நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் திரைப்படம் 'வாழை' 
 
இத் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட உள்ளது.
 
ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ள இத் திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் 'பாதவத்தி'
வெளியாகி உள்ளது.
 
'பரியேறும் பெருமாள்' படத்தில் அறிமுக இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ்.
 
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை வைத்து   மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.
 
இத் திரைப்படம் மெகா பிளாக் பஸ்டர் ஆனது.இதுவே உதய நிதி ஸ்டலின்  கடைசி படம் ஆகும்.
 
தற்போது ’வாழை’ திரைப்படத்தை தானே இயக்கி தயாரித்து உள்ளார்.
 
குழந்தைகளை மையமாக வைத்து எடுத்துள்ள இத் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார்.
 
மேலும் நிகிலா விமல்,திவ்யா துரைசாமி பிரியங்கா நாயர் உட்பட மற்றும் பலர்  நடித்துள்ளனர்
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வரன்,
ஒளிப்பதிவு
செய்துள்ளார்.
 
தனது சொந்த வாழ்வியலை மையப்படுத்தும் கதையாக  உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.
 
இந் நிலையில் இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது நான்காவதாக பாதவத்தி என்ற பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
கிராமத்து மண் வாசனையில் ஒரு இழப்பு ஏற்பட்டால் அந்த இழப்பால் குடும்பம் எப்படி வாழும் என்று தத்துரூபமாக உருவாகியுள்ளது
 'பாதவத்தி'
 
மாரி செல்வராஜ் எழுதியுள்ள இப்பாடலை ஜெயமூர்த்தி,மீனாட்சி இளையராஜா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
 
தற்போது இப்பாடல் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்