உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:07 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அருண்ராஜா காமராஜர் இயக்கத்தில் திபு நிபுணன் தாமஸ் இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்த கதையம்சம் கொண்டது என டீசரில் இருந்து தெரிகிறது 
 
போலீஸ் அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டருக்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது என்பது டீசரில் இருந்து தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உதயநிதி ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, இளவரசன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்