‘சூப்பர் பவர்’ கொண்ட உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வியாழன், 25 மே 2017 (17:37 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தில், ‘சூப்பர் பவர்’ கொண்டவராக நடித்துள்ளார் என்கிறார்கள்.


 

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். படப்பிடிப்பு முடிந்து, டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படத்தில், உதயநிதி, மஞ்சிமா மோகன் இருவருமே ஐடியில் வேலை பார்ப்பவர்களாக நடித்திருக்கிறார்கள். நினைத்து கூடப் பார்க்க முடியாத காரியங்களை எல்லாம், மூளைத்திறனாலேயே செய்து முடிக்கும் சூப்பர் பவர் வந்துவிடுகிறது உதயநிதிக்கு. இதனால் அவர் படும் கஷ்டங்களே இந்தப் படம் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்