பிரபாஸ் படத்துக்கு டிவிட்டர் அளித்த கௌரவம் ! – சாஹோ எமோஜி

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:24 IST)
பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்துக்காக டிவிட்டர் எமோஜி வெளியிட்டு கௌரவப் படுத்தியுள்ளது.

பாகுபலி 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் சாஹோ. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆகஸ் 30 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கான விளம்பரப்பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. முதல் முதலாக தெலுங்கு படத்துக்காக டிவிட்டர் எமோஜி ஒன்று வெளியிட்டுள்ளது இதுவே முதல்முறை.

இந்தப்படத்தில் பிரபாஸுடன், ஸ்ரத்த கபூர் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சாபு சிரில் கலை இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்