இனிமேல் வில்லனாக நடிக்கவே மாட்டேன் - தளபதி 64 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (13:02 IST)
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
பிகில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்த படத்தின் அப்டேட் வந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் அடிக்கடி இப்படத்திற்கான ஃபேன் மேட் போஸ்டர்களை தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்தது.  விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தளபதி 64ல் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.   


 
ஆனால், இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதன் முதலாக மலையாள டாப் ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸிடம் படக்குழு நேரடியாக அணுகி ஆண்டனி வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள். ஆனால் அவர், வில்லன் கதாபாத்திரமே வேண்டாம் என கூறிவிட்டாராம். காரணம் இவர் ஏற்கனவே மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் வில்லன் கதாபத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் அவருக்கு இருந்த தமிழ் ரசிகர்களும் போய்விட்டனர். எனவே இனி தமிழில் வில்லன் ரோலில் நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டாராம். பிறகு தான் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்