இதுதான் முன்னணி நடிகைகளின் ரேட்…

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (15:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாகத் திகழ்பவர்களின் சம்பளம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.


 

 
நடிகர்களைப் போலவே முந்தைய படங்களின் வியாபாரத்தைப் பொறுத்து அமைகிறது முன்னணி நடிகைகளின் சம்பளம். நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா, படம் ஒன்றுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தற்போது அவருடைய மார்க்கெட் இறங்கியுள்ளதால், சம்பளத்தைக் குறைக்கவும் தயாராக உள்ளாராம். தற்போது தெலுங்கில் ‘பாக்மதி’ படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, ‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தன் சம்பளத்தை ஏற்றி, படம் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் கேட்கிறாராம்.

விஜய் மற்றும் அஜித் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், படம் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வாங்குகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் சமந்தா, படம் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வாங்குகிறார். சீனியர் நடிகையான த்ரிஷா, படம் ஒன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வாங்குகிறார். சீனியராக இருந்தாலும், கையில் நான்கு படத்துக்கு மேல் வைத்துள்ளாராம். ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ரகுல் ப்ரீத்சிங், தமன்னா ஆகியோர், படம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்களாம்.
அடுத்த கட்டுரையில்