நாளை திருமணம்: இன்று பதிவு செய்த காஜலின் போஸ்ட் வைரல்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (12:47 IST)
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் இன்று மெஹந்தி சடங்கு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட மணமகள் காஜல் அகர்வால் இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மெஹந்தியுஅன் கூடிய இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
நாளை மும்பையில் உள்ள காஜல் அகர்வால் வீட்டில் இந்தத் திருமணம் எளிமையாக நடைபெற உள்ளது என்பதும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரை சேர்ந்த 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை வரவழைத்து பிரமாண்டமாக வரவேற்பு ரிசப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்