தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் இவ்வளவுதான் வசூல் செய்ய வேண்டுமாம்!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (17:37 IST)
தமிழக திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர் அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணங்களை வசூல் செய்யாமல் இஷ்டத்திற்கு வசூல் செய்தனர். இதுகுறித்து சமீபத்தில் விஷால் அரசிடம் கோரிக்க வைத்திருந்தார். இதன்படி தற்போது திரையரங்குகளில் வசூல் செய்ய வேண்டிய பார்க்கிங் கட்டணம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி இனிமேல் மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோவிற்கு ரூ.20ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். அதேபோல் நகராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோவிற்கு ரூ.15ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.7ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். மேலும் நகர, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோவிற்கு ரூ.5ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த புதிய பார்க்கிங் கட்டண அறிவிப்பிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்