மைக்கல் ஜாக்சன் டான்ஸ்... மஜா பண்ணிட்டாப்புல தல - பிரபலத்தின் விமர்சனம்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (10:05 IST)
எச் வினோத் - அஜித் காம்மோ கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு துணிவு படத்தில் இறங்கியது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித் வங்கி கொள்ளையராக நடித்திருக்கிறார். 
 
இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் இன்று நள்ளிரவு முதல் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. 
 
படத்தை பார்த்த ஆடியன்ஸ் அனைவரும் தரமான பாசிட்டிவான விமர்சனத்தை கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரபல யூட்டிபர் ஒருவர் துணிவு குறித்து, "அஜித்தின் ஓப்பன் பெர்பாமென்ஸ் படத்தை ரசிக்க வைக்கிறது என கூறியுள்ளார்.
 
மேலும், மைக்கல் ஜாக்சன் டான்ஸ், அடிதடி சேஸிங்,  என மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பட்டாசு  வெடிக்கிறார் அஜித். வங்கிகள் செய்யும் அட்டூழியங்களை மணி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் தட்டிக்கேட்பதே துணிவு படத்தின் ஒன்லைன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்