ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகும் மூன்று தமிழ் படங்கள்!

vinoth
புதன், 28 பிப்ரவரி 2024 (07:12 IST)
அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு மீதமுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  இந்த படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே தேதியில் கவின் நடித்து வரும் ஸ்டார் திரைப்படமும், அருள்நிதி நடித்துள்ள டிமாண்டி காலணி 2 திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வர உள்ளதால் முனன்ணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாமல் பின்வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்