பாண்டவர் அணியின் கடைசி கூட்டம் இதுதான்: நடிகர் சங்க பொதுக்குழுவில் விஷால்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (00:28 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஷால் பேசியதாவது:



 
 
இது எங்கள் தலைமையில் நடக்கும் கடைசி பொதுக்குழு கூட்டம். வழக்கமாக நடக்கும் எந்தப் பிரச்சனைகளும் இல்லாத வகையில் நடைபெற்ற சிறப்பான பொதுக்குழு கூட்டம். ஒவ்வொரு வருடமும் மூத்த கலைஞர்களை கெளரவிப்பது எங்கள் வழக்கம். அந்த வகையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகளான காஞ்சனா, ஷீலா, வைஜெயந்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் பல நிர்வாகம் சார்ந்தது
 
நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபத்தில் கலைஞரின் பெயரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிற்கு வைக்க இருக்கிறோம். சிவாஜி ஐயாவிற்கு மணிமண்டபம் கட்டியதற்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கவும் தமிழ் சினிமாவிற்கு வரி மூலமாக மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள் என்ற கோரிக்கை வைக்கவும் தலைமை செயலகம் செல்ல உள்ளோம். 
 
பின்னர் நடிகர் சங்கத்தலைவர் நாசர் பேசியதாவது: அடுத்த தேர்தல் ஆகஸ்ட் இறுதியில் வரும். இதே கூட்டணி நிச்சயம் போட்டியிடும். கட்டிடத்தை முடித்துவிட்டு தான் அடுத்த வேலையே. ஆக, அடுத்த தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிடும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்