மணிரத்னம் அடுத்த படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (23:55 IST)
மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு, ஜோதிகா உள்பட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது



 
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 
 
வரும் ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்