கார்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (17:24 IST)
சென்னையில் பெய்து வரும் கனமழையால் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்த் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.


 

 
சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தை இயக்கிய வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தீரம் அதிகாரம் ஒன்று. இதில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
சென்னையில் பெய்து வரும் கனமழையால் காரணமாக நாளை பெற இருந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே அறிவித்த படி நாளை பாடல்கள் இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படம் வருகிற 17ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரத்து செய்யப்பட்டுள்ள இசை வெளியீட்டு விழா அடுத்து எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்