தியேட்டர்கள் திறக்க அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் மனு!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (11:24 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 4 நாட்களுக்கு ,முன்னர் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டது.

டெல்லி மும்பை கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருந்த நிலையில் 10 சதவீத இருக்கைகள் கூட நிரம்பாமல் இருந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சி அடைந்தனர் ஒரு சில திரையரங்குகளில் 4 முதல் 10 பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டருக்கு வருகை தந்திருந்தார்கள் என கூறி உரிமையாளர்கள் கவலை அடைந்தனர்.

இப்படியான நேரத்தில் தற்ப்போது தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி கோரி சென்னையில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். எனவே விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்