தேள் படத்தின் உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:43 IST)
தேள் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா பாலிவுட்டில் பிஸியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது மீண்டும் நடிப்புப் பாதைக்கு திரும்பியுள்ளார். தமிழில் அவர் நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் நடன இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் அவர் தேள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். டிசம்பர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் விநியோக உரிமையை மேஜிக் ரேய்ஸ் எனும் விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்