பிரபல பாடகரின் உடலை வெட்டி ஃபிரிஜ்ஜில் பதுக்கிய மனைவி !

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:03 IST)
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ திடீரென்று மாயமானதாக மரினா குக்கல்  போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து போலீஸார் மனைவியிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில்,  தன் கணவர் உடலை மறைக்கத் துண்டுதுண்டாக வெட்டி ரெப்ஜிரேட்டரில் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

போலீஸார் அவரது வீட்டைச் சோதனையிட்டனர். ஆனால் அதில், குடல் மற்றும் சில முக்கிய உறுப்புகள் இல்லாமல் போகவே மரியாவின் குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.

பாடகர் அலெக்சாண்டரின் மரணம் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்