கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (00:00 IST)
ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியுள்ளதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதம் ஒப்புதல் வழங்கும் என தகவல்கள் வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

ஆனால், ரஷ்யாவின் இந்த வேகமான நடவடிக்கை குறித்து சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

``ரஷ்யாவும் சீனாவும் தாங்கள் தயாரித்துள்ள மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கு முன்பே, தடுப்பூசியை தயாரித்துவிட்டன`` என்று தான் நம்புவதாகக் அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபவுசி கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்