அறிமுக இயக்குனர் இயக்கத்தில் புது முகங்களை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பிரபஞ்சம்'

J.Durai
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:57 IST)
பிரைட் ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில்  எஸ்.ஏ. கரீம் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 
"பிரபஞ்சம்"
 
இத் திரைப்படத்தில் வீரா,சமிதா,அம்ருதா வி.ராஜ்,போஸ்,  கதிர்வேல், குருமூர்த்தி,ரோகித், உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள  அழகிய இடங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
 
உதய்சங்கர் கேமராவையும், பிரேம் இசையையும், ரகு படத்தொகுப்பையும் , இடிமின்னல் இளங்கோ சண்டை பயிற்சியையும், மனோகர் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.
 
இது குறித்து  இயக்குனர் சங்கர் கூறியது......
 
ஜி.யிடம் கேட்ட பொழுது இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் இன்ப,துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். 
 
இந்த
பிரபஞ்சம் எல்லோருக்குமானது என்று நினைக்கிறோம். ஆனால் வாழத் தெரிந்தவர்களுக்கே இந்த பிரபஞ்சம் வசப்படுகிறது என்பதை  பரபரப்பான கதையாக்கி, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்