தனுஷ் வெளியிட்ட ''கள்வன்''பட மோசன் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (17:26 IST)
நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரின் கள்வன் பட மோசன் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், நடிகாருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடிக்கவுள்ள புதிய படம் கள்வன். இப்படத்தை அறிமுகம் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார்.

இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி  தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம்தான் பேச்சிலர் படத்தைத் தயாரித்திருந்தது.

இந்த நிலையில், கள்வன் படஷூட்டிங்  அடர்ந்த காடுகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று   மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு கூறியிருந்தது.

அதன்படி,  நடிகர் தனுஷ்  தன் டுவிட்டர் பக்கத்தின் 'கள்வன்' பட மோசன் போஸ்டரை  ரிலீஸ் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்