’’மாஸ்டர்’’ படம் குறித்து பாசிட்டிவாக பேசிய அமைச்சர்... விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (17:47 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைக்கு வரவுள்ள படம் மாஸ்டர்.

இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாக  செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர்ராஜு, வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அவர்,  மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதால் தமிழகத்தில் திரையரங்குகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பொங்கலுக்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாமல் போய்விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் இத்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கவே சமூக விலகலுடன் முகக்கவசம் அணிந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால்  இத்தொற்று விரையில் ஓடிப்போகும் எனத் தெரிவித்துள்ளார். #mater #vijay

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்