’தி கேரளா ஸ்டோரி’ காட்சிகள் ரத்து செய்த மாநிலங்கள் மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:30 IST)
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்த மாநிலங்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களில் மட்டும் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தாலும் தியேட்டர் அதிபர்களே முன்வந்து இந்த படத்தை திரையிடவில்லை என்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த படத்திற்கு தடை செய்ய இருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தின் காட்சிகளை ரத்து செய்த மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்