'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது: திரையரங்கங்கள் அறிவிப்பு

ஞாயிறு, 7 மே 2023 (07:45 IST)
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாளை முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றே திரையிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நாடு முழுவதும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகள் முன் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தன. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் இன்றே திரையிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்