நடிகர் சங்க தேர்தல் வழக்கில் தீர்ப்பு: விஷால் அணி மகிழ்ச்சி

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (10:52 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடந்த நிலையில் இது குறித்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணி மற்றும் விஷால் அணி போட்டியிட்டனர். இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தனி நீதிபதி கல்யாண சுந்தரம் என்பவர் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த நிலையில் தற்போது இந்த மேல்முறையீட்டு மனு தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
 
மேலும் நான்கு வாரத்திற்குள் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்