புருஸ் லீயிடம் குங்பூ கற்க ஆசைப்பட்ட நடனப்புயல்! 'யங் மங் சங்' குறித்து சுவாரஸ்ய தகவல்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (15:06 IST)
பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி மற்றும் அஸ்வின் நடிக்கும் யங் மங் சங் படம் குறித்து இயக்குனர் அர்ஜுன் சில முக்கிய தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.


 
இது தொடர்பாக அர்ஜுன் கூறுகையில், 'பிரபு தேவா குங்பூ குறித்து காட்சிகளை ஒரு படத்தில் பார்க்கிறார். அதன் பின்னர்  புருஸ் லீ இறந்தபோனது தெரியாமல் அவரிடம் குங்பூ கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார் பிரபுதேவா. இதற்காக  தனது நண்பர்கள் ஆர்ஜே பாலாஜி மற்றும் அஸ்வினுடன் சீனா செல்கிறார். 
 
சீனாவில் புருஸ் லீயின் கிராமத்துக்கு சென்று பார்த்தால், அவர் இறந்த பல வருடங்கள் ஆகிவிட்டது என்பது பிரபுதேவா மற்றும் நண்பர்களுக்கு தெரிகிறது
. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கே குங்பூ கற்கிறார்கள் அதன் பிறகு ஏற்படும் பிரபுதேவாவுக்கு  ஏற்படும் அனுபங்களே கதை என்றார்.


 
மேலும் அவர் கூறுகையில், 'யங் மங் சங்' படத்தின் ஷூட்டிங் சீனாவில் 7 நாட்கள் நடந்தது. சில சண்டை காட்சிகள் மற்றும் மாண்டேஜ் பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 நிமிடக்காட்சிகள் சீனாவில் படமாக்கியுள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்