’காந்தாரா’ பட இயக்குனரை சந்தித்த முதல்வர்...

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (23:21 IST)
கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.

இப்படம் ரூ 16 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டிக்க்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் கூறினர். சமீபத்தில் இவரை அழைத்து பிரதமர் மோடியை நேரில் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது சற்று முன் அறிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டியை கர் நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர்தன் சமூகவலைதளப் பக்கத்தில், ‘’’கன்னட சினிமாவின் சிறந்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் மூலம் மண்ணின் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர். வனவாசிகளுடன் பேசி, அவர்களின் பிரச்சனைகளை தெரிவித்துள்ளார். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்’ என்று தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்