கலைஞர் மறைவை பற்றி பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. அதுவரை அவர் இருப்பதாகத்தான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கலைஞர் 100 விழா இன்று 6 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடந்து வருகிறது.
,இன்று மாலை 4மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், கலைஞரின் அரசியல், சினிமா சாதனை பற்றி பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை, முதன் முதலில் ஒரு படத்தின் பூஜையின்போது அவரை சந்தித்தேன். அப்போது என்னை வாங்க மன்மதராஜா எனக் கூறி அழைத்தார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞர் மறைவை பற்றி பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. அதுவரை அவர் இருப்பதாகத்தான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.