சென்னையை காலி பண்ணப் போறாரா?… மதுரையில் பிரம்மாண்டமாக வீடு கட்டும் வடிவேலு!

வியாழன், 4 ஜனவரி 2024 (08:46 IST)
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அரசியல் காரணங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதையடுத்து இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து ரி எண்ட்ரி கொடுத்தார். இதில் மாமன்னன் திரைப்படம் அவரது நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது.

இதையடுத்து இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை தவிர அவரிடம் வேறு படங்கள் கைவசம் இல்லை.

இந்நிலையில் வடிவேலு  20000 சதுர அடியில் மதுரையில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் சென்னையை காலி செய்துவிட்டு மதுரைக்கு சென்று தங்க முடிவெடுத்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்